சி.எஸ்.கே பந்துவீச்சு குறைபாட்டை இவர்கள் தீர்ப்பார்களா?

2018 ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்றாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோற்றது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் சி.எஸ்.கே இருந்தாலும், பந்துவீச்சில் சில சோதனையை அணி சந்தித்து வருகிறது. சி.எஸ்.கே பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி வழங்குகின்றனர். இதனால் ரன் சேசிங்கில் அணி மிகவும் கஷ்டப்படுகிறது.
 | 

முதல் இரண்டு போட்டிகள் தான் அதற்கு உதாரணம். அந்த போட்டிகளில் ஒரு ஓவருக்கு 10 ரன்களை கொடுத்திருப்பார்கள். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால், அவர்களால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இன்று (20ம் தேதி) சி.எஸ்.கே அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதுகிறது. இந்த நிலையில், இந்த இரு வீரர்கள் பந்துவீச்சு குறைபாடுகளில் தவிக்கும் சி.எஸ்.கே அணிக்கு பக்க பலமாக இருப்பார்கள். அவர்களை அறிந்து கொள்வோம்..

கார்ன் சர்மா:

சி.எஸ்.கே பந்துவீச்சு குறைபாட்டை இவர்கள் தீர்ப்பார்களா?

ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.5 கோடிக்கு சர்மா வாங்கப்பட்டார். ஆனால், சி.எஸ்.கே அணி இவரை இன்னும் களமிறக்கவில்லை. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் சர்மா, அனைவரையும் தனது சிறப்பான ஆட்டத்தால் ஈர்த்தார். கடந்த ஆண்டு 9 போட்டிகளில் 13 விக்கெட்களை அவர் வீழ்த்தினார். அவருடைய எக்கனாமி ரேட் 6.97 ஆக இருந்தது. இவர் ஹர்பஜன் அல்லது தாஹிருக்கு பதிலாக களமிறக்கப்படலாம். இவர் சி.எஸ்.கே-வின் பந்துவீச்சு குறைபாடுகளை சரி செய்வார். அது மட்டுமில்லாமல் எதிரணிக்கு பெரியளவில் தாக்கத்தை உண்டாக்குவார். 

டேவிட் வில்லி:

சி.எஸ்.கே பந்துவீச்சு குறைபாட்டை இவர்கள் தீர்ப்பார்களா?

நல்ல திறமையான வீரர்களான கேதார் ஜாதவ், மிட்செல் சான்ட்னர் ஆகியோரை அடுத்தடுத்து தவறவிட்ட சி.எஸ்.கே, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர், டி20 ஸ்பெஷலிஸ்ட் வில்லியை தேர்வு செய்தது. பவர் பிளேவில் தடுமாறும் சி.எஸ்.கே-வுக்கு இவர் பலம் சேர்ப்பார். இவர் இன்னிக்ஸை தொடங்குவதற்கு நல்ல துருப்புச் சீட்டு. துவக்கமில்லை என்றாலும், மிடில் ஆர்டரிலும் இவர் அசத்துவார். சி.எஸ்.கே அணியில் இடதுகை பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையையும் இவர் தீர்ப்பார். 

சென்னை அணி பந்துவீச்சில் உள்ள குறைபாட்டை சரி செய்யாதவரை, யாரை எப்போது களம் இறக்குவது என்பதில் தெளிவு கொள்ளாதவரை வெற்றி பெறுவது சற்று கடினம்தான். எல்லா போட்டிகளிலும் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. கொஞ்சம் பவுலர்களும் சுமையை குறைக்க வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP