ஹைதராபாத் பவுலர்களை சமாளிக்குமா சென்னை அணி?

புனேவில் உள்ள எம்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று பகல் 4 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
 | 

ஹைதராபாத் பவுலர்களை சமாளிக்குமா சென்னை அணி?

ஹைதராபாத் பவுலர்களை சமாளிக்குமா சென்னை அணி?புனேவில் உள்ள எம்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று பகல் 4 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் 2018ல் பிளேஆஃப் சுற்றுக்கு தற்போதைய நிலையில் தகுதி பெற்றிருக்கும் ஒரே அணி ஹைதராபாத். தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் இந்த அணி இன்று சென்னையை எதிர்கொள்கிறது. 

சென்னை சூப்பர் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததது. அந்த போட்டியில் மோசமான பந்துவீச்சால் தான் தோல்வியடைந்தோம் என்று அந்த அணியின் கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இன்னும் 2 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் மிக எளிதாக அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அந்த அணி அடையும். இன்றைய போட்டியில் காயத்தால் விலகி இருந்த தீபக் சாஹர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. 

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணி 11 போட்டிகள் விளையாடி 9ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இந்த அணி தனது வெற்றி பயணத்தை தொடர முயலும். கடைசியாக டெல்லி அணியை எதிர்த்து விளையாடிய போது அந்த அணி 188 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெற்றது. பவுலிங்கில் பலமாக இருக்கும் அந்த அணி தற்போது பேட்டிங்கில் கலக்க துவங்கி உள்ளது. 

கடைசி ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அந்த அணியின் பவுலர்கள் இன்று மீண்டும் ஃபார்முக்கு வர முயல்வர்.

இதுவரை 7 போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதி உள்ளனர். அதில் 5ல் சென்னையும், 2ல் ஹைதராபாத்தும் வென்றுள்ளது. 

இன்றைய போட்டியில் 47 ரன்கள் எடுத்தால் தோனி 4000 ரன்கள் கடப்பார், 11 ரன்கள் எடுத்தால் ஷேன் வாட்சன் 3000 ரன்களை கடப்பார். சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிரவோ 4 விக்கெட்கள் எடுத்தால் சென்னை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெறுவார். 

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிக்களுக்கு இடையேயான போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP