பெங்களூருவை தட்டித் தூக்குமா சென்னை?

ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்த 130 ரன்களை அடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தட்டித்தூக்குமா என்பது ரசிகர்களின் பரபர எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.
 | 

பெங்களூருவை தட்டித் தூக்குமா சென்னை?

பெங்களூருவை தட்டித் தூக்குமா சென்னை?

ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்த 127 ரன்களை அடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தட்டித்தூக்குமா என்பது ரசிகர்களின் பரபர எதிர்ப்பார்ப்பாகவுள்ளது. 

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில், புனேவில் இன்று நடந்த 35 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் ஆடாமல் இருந்த டீ வில்லியர்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலி 8 ரன்களில்ஆட்டமிழந்தார். நின்று விளையாடிய பார்த்திவ் படேல் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அனைத்து வீரர்களுமே, சென்னை வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆகினர். இறுதிவரை டிம் சவுதி மட்டும் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.  8 போட்டியில் விளையாடிய பெங்களூரு அணி, 3 வெற்றி, 5 தோல்வியுடன் இருக்கிறது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால்தான் அடுத்தச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடியில் விளையாடிய பெங்களூரு அணி 127 சொர்ப்ப ரன்களை சி.எஸ்.கே.வுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை பேட்டிங்கை தொடங்கவுள்ளது.

சிஎஸ்கே இதுவரை விளையாடிய 9 ஆட்டத்தில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் 130 ரன்களை சிஎஸ்கே சிங்கங்கள் அசால்டாக அடிப்பார்களா என்பது சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP