ஐபிஎல் போட்டியை நேரில் சென்று பார்க்காதது ஏன்?- சச்சின் விளக்கம்

கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐபிஎல் பைனலை நேரில் வந்து பார்க்காதது ஏன் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

ஐபிஎல் போட்டியை நேரில் சென்று பார்க்காதது ஏன்?- சச்சின் விளக்கம்

ஐபிஎல் போட்டியை நேரில் சென்று பார்க்காதது ஏன்?- சச்சின் விளக்கம்

கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐபிஎல் ஃபைனலை நேரில் வந்து பார்க்காதது ஏன் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2018 கிரிக்கெட் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறு அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. சென்னை அணியின் சிறப்பான ஆட்டத்தால் ஹைதராபாத் அணியை வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றியது. பிரம்மாண்டமாக நடைபெறும் ஐபிஎல் ஃபைனலை காண ஒவ்வொரு வருடம் தவறாது வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் சச்சின், இந்த வருடம் ஐபிஎல் இறுதி போட்டியை நேரில் காண வரவில்லை. சச்சின் வராதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. 

ஐபிஎல் போட்டியை நேரில் சென்று பார்க்காதது ஏன்?- சச்சின் விளக்கம்

இந்நிலையில் சச்சின் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பல கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் போட்டி ஈர்த்தது. சென்னை vs ஹைதராபாத் இடையே இறுதிப் போட்டி சிறப்பாக நடந்தது. இந்த போட்டியை மிகச்சிறந்த பாடகி லதா மங்கேஸ்கர் சகோதரியுடன் கண்டு களித்தது மேலும் சிறப்பாக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP