ப்ரியா வாரியரின் ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

ஒரு வீடியோ மூலம் ஓஹோவென ஆனவர் மலையாள பைங்கிளி ப்ரியா பிரகாஷ் வாரியர். அவர் நடித்து வரும் 'ஓர் அடார் லவ் ' படத்தில் இருந்து வெளியான 'மாணிக்யா மலராய பூவி' பாடல் டீசர் தான் இணையதளத்தின் டாப் வைரல். 28 நொடி ஓடக்கூடிய அந்த விடியோவை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இன்னும் அந்த வியூஸின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 | 

நேற்று வாலெண்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ப்ரியா படத்தில் இருந்து மற்றொரு வீடியோவும் வெளியானது. அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தனது கியூட் எக்ஸ்பிரஷன்களால் இப்படி ஓவர்நைட்டில் பேமஸ் ஆகியுள்ளார் ப்ரியா. இதனால் அவரை பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவருக்கு என்ன பிடிக்கும்? யாரை பிடிக்கும்? நம்மக்கு பிடித்தது அவருக்கு பிடித்து விட்டால் சொல்லவே வேண்டாம்.. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போகும். 

இந்த நிலையில், அவருடைய ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் யார் என்பதை தனது பேட்டியின் போது ப்ரியா வாரியர் பகிர்ந்து கொண்டுள்ளார். நீங்க கெஸ் பண்ணது போல், அது இந்திய கேப்டன் விராட் இல்லை. முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி. ப்ரியா வாரியருக்கு தோனியை தான் ரொம்ப பிடிக்குமா.. அனைவருக்கும் இது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில், தற்போது கிரிக்கெட் அணியில் விராட்டுக்கு தான் மவுசு அதிகம். ஆனால், தோனியை தன் ஃபேவரைட் ஹீரோவாக பார்க்கும் அளவுக்கடங்கா ரசிகர்கள் கூட்டமும் இருக்க தான் செய்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP