தோனியின் அதிரடி ஃபார்மிற்கு என்ன காரணம்?- ஃபிளெமிங் பதில்!

ஐ.பி.எல்-ல் தோனியின் ஆச்சரியமூட்டும் ஃபார்மிற்கு என்ன காரணம் என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பகிர்ந்துள்ளார்.
 | 

தோனியின் அதிரடி ஃபார்மிற்கு என்ன காரணம்?- ஃபிளெமிங் பதில்!

தோனியின் அதிரடி ஃபார்மிற்கு என்ன காரணம்?- ஃபிளெமிங் பதில்!

ஐ.பி.எல்-ல் தோனியின் ஆச்சரியமூட்டும் ஃபார்மிற்கு என்ன காரணம் என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பகிர்ந்துள்ளார். 

2018 சீசன் ஐ.பி.எல் போட்டியில் தோனியின் ஃபார்ம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஐ.பி.எல்-ல் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் தோனியின் ஃபார்ம் நம்மை கவரக்கூடியதாக அமைத்துள்ளது. 12 போட்டிகளில் தோனி, 413 ரன் விளாசியுள்ளார். 29 சிக்ஸர்களை பறக்கவிட்டிருக்கிறார். அவரது சராசரி 103.25. ஸ்ட்ரைக் ரேட் 162.59. 2013ம் ஆண்டுக்கு பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காத தோனி, இந்த சீசனில் மூன்று முறை அரைசதங்களை அடித்துள்ளார். எப்போதும் களத்துக்கு வந்து பேட் செய்யும் போது, உடனே அதிரடியான ஆட்டத்தை துவங்காத தோனி, இந்த சீசனில் துவக்கத்திலேயே அதிரடி காட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

சி.எஸ்.கே அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், சி.எஸ்.கே அணியை சிறப்பாக வழி நடத்தும் தோனியின் இந்த அதிர்ச்சியளிக்கும் ஃபார்மின் ரகசியம் என்ன என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்தார்.

தோனியின் அதிரடி ஃபார்மிற்கு என்ன காரணம்?- ஃபிளெமிங் பதில்!

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை சி.எஸ்.கே வீழ்த்தியது. வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்த ஃபிளெமிங், உத்வேகம் அளிக்கக்கூடிய தோனியின் இந்த ஃபார்மிற்கு அவரது கடுமையான உழைப்பே காரணம் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், "போட்டிக்கு முன்பு அவர் மனநிறைவான தீவிர பயிற்சியில் ஈடுபடுவார். நீண்ட நேரம் அவர் பயிற்சி எடுப்பார். பயிற்சிக்கு மற்ற வீரர்கள் வரும் முன்பே அவர் களத்துக்கு வந்து பயிற்சியை மேற்கொள்வார். அவருடைய நோக்கத்தில் கவனம் செலுத்தும் அவர், அதிக பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி எடுப்பார். 

100 சதவீத அர்ப்பணிப்போடு அவர் விளையாடுவார். அவர் ஆட்டத்தை துவக்கம் விதம், அவரது கால்தாளங்களின் வேலை, நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். அவருடைய ஃபினிஷிங் மீண்டும் வளையத்திற்குள் வந்துள்ளது. இதனை எட்ட இருந்த அவரது கடுமையான உழைப்பை பார்ப்பதில் சிறப்பாகவும், அதை அவர் செய்யும் போது ரசிக்கவும் வைக்கிறது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP