கடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன? - தோனி மழுப்பல்

அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் பிராவோவுக்கும் அறிவுரை தேவைப்படுகிறது என்று நேற்றைய வெற்றிக்கு பிறகு தோனி தெரிவித்தார்.
 | 

கடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன? - தோனி மழுப்பல்

கடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன? - தோனி மழுப்பல்அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் பிராவோவுக்கும் அறிவுரை தேவைப்படுகிறது என்று நேற்றைய வெற்றிக்கு பிறகு தோனி தெரிவித்தார். 

ஐதரபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய சென்னை அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதன் பின் விளையாடிய ஐதரபாத் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, கடைசி ஓவரின் போது பிராவோவிடம் என்ன பேசினேன் என்பதை சொல்ல மாட்டேன். பிராவோ அனுபவம் உள்ள வீரராக இருந்தாலும் சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் இருக்கும்போது பிராவோவின் திட்டத்தை மாற்ற சொன்னேன். அதனால் வெற்றி கிடைத்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது  முக்கியம். 

ஐ.பி.எல் தொடக்கத்தில் இருந்ததை விட இந்த பிட்ச் தற்போது நன்றாக இருக்கிறது. பேட்ஸ்மேன்களின் இக்கட்டான நிலையில் தான் பந்து வீச்சாளர்களின் புதிய திட்டத்தை பார்க்க முடியும்.

கடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன? - தோனி மழுப்பல்தீபக் சாஹர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரால் பந்தை நன்றாக சுழற்ற முடிகிறது. தாகூரால் கடந்த  ஆண்டு சர்வதேச பயணத்தின் போது சரியாக விளையாட முடியவில்லை. ஆனால் அவர் பந்துவீச்சில் மாற்றங்கள் கொண்டு வருகிறார். அது மிகவும் முக்கியம். இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 

மேலும் ராயுடு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார;. அவரை எந்த வரிசையில் இறக்குவது என்று நினைத்தேன். அது நல்ல இடமாக இருக்க வேண்டும். அவர் எப்போது களத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவார். ஆனால், ஓப்பனிங்கில் அவர் தான் சிறந்தவர் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP