வெ. இ. டூருக்கு முழு உடற்தகுதி பெற்றுவிட்ட இலங்கையின் மேத்தியூஸ், லக்மல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கையின் முன்னணி வீரர்கள் மேத்தியூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றுவிட்டனர்.
 | 

இலங்கை கிரிக்கெட் அணி, வரும் மே 30 தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கு முன் ஒரு பயிற்சி போட்டி நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீசில் இலங்கை விளையாட இருக்கிறது. 

இந்த டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணியில், குறுகிய ஓவர் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ், சுரங்கா லக்மல் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஆடும் லெவனில் இவர்கள் பங்கேற்பது சந்தேகமாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் உடற்தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெ. இ. டூருக்கு முழு உடற்தகுதி பெற்றுவிட்ட இலங்கையின் மேத்தியூஸ், லக்மல்

காயத்தால் அவதிப்பட்டு வந்த இருவரும், கடந்த மாதம் மருத்துவ ரீதியாக தேர்ச்சி பெற்றாலும், போட்டியில் பங்கேற்பதற்கான மதிப்பீடு கண்டி பயிற்சி முகாமில் நடைபெற்றது. இதில் இருவரும் தேர்ச்சி பெற்றதால், தற்போது போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர். 

இலங்கை டெஸ்ட் அணி: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), மஹேல உதவாட்டே, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனன்ஜெய டி சில்வா, ரோஷன் சில்வா, ஏஞ்சலோ மேத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்லா, ரங்கனா ஹெராத், தில்ருவான் பெரேரா, அகில தனன்ஜெய, ஜெப்ரி வண்டெர்சய, லஹிரு காமேஜ், கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், லஹிரு குமரா, அசிதா ஃபெர்னாண்டோ.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP