வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல: விராட் கோலி

வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல என்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பின கோலி கூறினார்.
 | 

வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல: விராட் கோலி

வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல: விராட் கோலிவெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல என்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பின கோலி கூறினார். 

ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாட லீக் போட்டி எம்.ஏ.சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 68 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

நேற்றைய தோல்விக்கு பின் பேசிய கோலி, இந்த பிட்ச் எப்போது ஆடினாலும் ஆச்சர்யத்தை கொடுக்கிறது. 175 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் இதுபோன்று நாங்கள் ஃபீல்டிங் செய்தால் வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. இன்னும் கடுமையாகவும் தைரியாமாகவும் விளையாட வேண்டும். வரும் நாட்களில் அதனை நாங்கள் சரி செய்ய பார்ப்போம். இன்று நாங்கள் சரியாக விளையாடவில்லை. 

தற்போது தோல்விக்கு இது தான் காரணம் என்று என்னால் சொல்ல முடியாது. இன்னும் 6-7 போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றே ஆக வேண்டும். இனி விளையாட இருக்கும் போட்டிகள் அனைத்தையும் அரையிறுதி போல கருதி விளையாட வேண்டும். இந்நிலையில் நான் குற்றம் கூறிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறினார்.

மேலும் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறும்போது, நாங்கள் மிக சிறப்பாகவும் விளையாடவில்லை, மோசமாகவும் விளையாடவில்லை. நிச்சயமாக பெங்களூரு எடுத்தது நல்ல ஸ்கோர் தான். டிவில்லியர்ஸ் இல்லாத போது கோலியின் விக்கெட் தான் மிக முக்கியம்.

எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர்.  உலக கோப்பையை வென்ற அணியில் இருந்து வந்தவர்கள். கோப்பையை வென்று விட்டோம் என்ற தலைகனம் இல்லாமல் அவர்கள் விளையாடுகின்றனர். அதற்கு காரணம் ராகுல் டிராவிட். அவரை போன்ற பயிற்சியாளர் கிடைத்தால் பலவற்றை கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP