'ஹெட்ஸ்கார்ஃப்' அணிய வேண்டுமா?- ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர்

இந்தியாவின் மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் சௌமியா ஸ்வாமிநாதன் (29), ஈரானில் நடைபெற உள்ள ஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்துள்ளார்.
 | 

'ஹெட்ஸ்கார்ஃப்' அணிய வேண்டுமா?- ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர்

இந்தியாவின் மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் சௌமியா ஸ்வாமிநாதன் (29), ஈரானில் நடைபெற உள்ள ஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்துள்ளார். 

ஈரானின் ஹமதான் நகரில் வருகிற ஜூலை மாதம் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை ஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. இஸ்லாமிக் நாடாக அழைக்கப்படும் இடத்தில் நடக்கும் போட்டியின் விதிமுறை, மகளிர் கட்டாயம் ஹெட்ஸ்கார்ஃப் (தலையங்கி) அணிய வேண்டும். ஆனால், தன்னுடைய சொந்த உரிமைக்காக, அந்த விதிமுறையை உடைய அப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று இந்தியாவின் செஸ் சாம்பியன் சௌமியா தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் நம்பர் 5 மற்றும் உலகளவில் நம்பர் 97-வது இடம் வகிக்கும் சௌமியா, முன்னாள் உலக ஜூனியர் மகளிர் சாம்பியன் ஆவார். 

அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், "நான் ஹெட்ஸ்கார்ஃபை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்க விரும்பவில்லை. கட்டாயம் ஹெட்ஸ்கார்ஃப் அணிய வேண்டும் என்ற ஈரானின் அந்த விதியை நான், என்னுடைய அடிப்படை மனித உரிமை, கருத்து சுதந்திரம் உரிமை, சிந்தனை சுதந்திரம் உரிமை, மனசாட்சி மற்றும் மதம் ஆகியவற்றிற்காக மீறுகிறேன். தற்போதைய சூழ்நிலையில், என் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே வழி, ஈரானுக்கு செல்லாமல் இருப்பது தான். 

'ஹெட்ஸ்கார்ஃப்' அணிய வேண்டுமா?- ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர்

சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் போது, வீரர்களின் உரிமை மற்றும் நல்வாழ்வுக்கு சிறிய முக்கியத்துவம் வழங்கப்படுவதை பார்க்கும் போது ஏமாற்றமளிக்கிறது. போட்டியை நடத்துபவர்கள், நாங்கள் தேசிய அணியின் உடையை அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால், விளையாட்டில் மதம் சார்ந்த உடைகளை கட்டாயப்படுத்தி அணிய வைத்தால், அதற்கான இடத்தை அளிக்க மாட்டோம். 

இந்திய அணிக்காக எப்போதெல்லாம் நான் தேசிய அணிக்காக தேர்வாகி விளையாடுகிறேனோ, அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால், இந்த முக்கியமான சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாததற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு வீரர்களாக இருக்கும் நாங்கள், நாங்கள் விரும்பும் இந்த போட்டிக்காக பலவற்றைகளை சமாளித்துக் கொள்கிறோம். ஆனால், சில விஷயங்களை ஒரு போதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

இவரது இந்த துணிச்சலான பதிவுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவின் ஹீனா சித்து, இதே காரணத்திற்காக ஈரானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் போட்டியை புறக்கணித்தார். 2017ல் அமெரிக்காவின் நஜி பைகிட்ஸியும், இந்த காரணத்திற்காகவே உலக சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணிப்பு செய்தார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP