தோனி, அஸ்வின் அணியை புகழ்ந்த விராட் கோலி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிறந்த ஆல்ரவுண்டர் அணிகளாக இருக்கின்றன என தோனி கூறினார்.
 | 

தோனி, அஸ்வின் அணியை புகழ்ந்த விராட் கோலி

தோனி, அஸ்வின் அணியை புகழ்ந்த விராட் கோலி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிறந்த ஆல்ரவுண்டர் அணிகளாக இருக்கின்றன என தோனி கூறினார்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 56 ரன்கள் எடுத்தார். 

அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது 

இந்த தோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் கோலி, 

நாங்கள் இன்று சரியாக விளையாடவில்லை. தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான். எதிரணியை வெற்றியை நோக்கி செல்ல விட்டுவிட்டோம். இந்த தொடர் முழுவதும் இந்த தவறை தான் செய்துவிட்டோம். பீல்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முதல் இன்னிங்சில் அவர்கள் மொத்த ரன்களில் 10-15 ரன்கள் குறைவாக எடுக்கும் விதத்தில் பந்து வீசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு கொஞ்ம் கடினமானது தான். நாங்கள் பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அணிக்குறித்த புரிதல் இருக்கிறது. அது அவர்கள் வெற்றிக்கு காரணமாக உள்ளது. அவர்களது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இது தான் அவர்களுக்கு எங்களுக்கும் உள்ள வித்தியாசம். 

ஆல் ரவுண்டர் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிறப்பாக இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சில் சிறப்பாக விளங்குகின்றனர் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP