‘வர்தா’வாலேயே எதுவும் செய்ய முடியல 11 வீரர்களால் சாய்க்க முடியுமா- ஹர்பஜன்

வர்தா புயலாலயே சென்னையை ஒன்றும் செய்ய முடியவில்லை. 11 வீரர்களை கொண்டு சாய்த்துவிட முடியுமா என ஹர்பஜன் சிங் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஒவ்வொரு ஆட்டத்தின் வெற்றிக்குபின், லோக்கல் தமிழில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ட்வீட்ஸ் செய்து வருகிறார். ஒவ்வொரு போட்டியையும் ஆர்வத்துடன் பார்க்கும் சி.எஸ்.கே ரசிகர்கள் போட்டி முடிவில் ஹர்பஜனின் ட்விட்டர் பக்கத்தை நோட்டமிடுவதுண்டு.

‘வர்தா’வாலேயே எதுவும் செய்ய முடியல 11 வீரர்களால் சாய்க்க முடியுமா- ஹர்பஜன்

அந்தவகையில், நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஓங்கி இடிஇடித்து, ஓயாமல் மின்னல் வெட்டி, பல மணிநேரம் நிக்காமல் நிரம்ப பெய்த, வர்தா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை. 11 வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா. இது தலை நிமிர்ந்து நடை போடும் சென்னை அணி” என பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP