ஹாலுக்கு வந்த வால்- சச்சின் ட்வீட்

ஹால் ஆஃப் பேம் விருது வென்ற ட்ராவிட்டை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 | 

ஹாலுக்கு வந்த வால்- சச்சின் ட்வீட்

ஹால் ஆஃப் பேம் விருது வென்ற ட்ராவிட்டை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை "ஹால் ஆஃப் பேம்" மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் பேம் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டுக்கு வழங்கப்பட்டது. 

ஹாலுக்கு வந்த வால்- சச்சின் ட்வீட்

இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 288 ரன்கள் குவித்துள்ளார் ட்ராவிட். இதே போல் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ட்ராவிட் 10 ஆயிரத்து 889 ரன்கள் சேர்த்துள்ளார். தடுப்பாட்டத்தில் சிறந்தவரான ட்ராவிட் பேட்டிங்கில் இந்திய அணியின் சரிவை தடுக்கும் வால் ஆஃப் விக்கெட்டராக வலம் வந்தார். இந்த பெருமையை பெரும் ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் என்பது குறிப்பிடதக்கது. 

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹால் ஆஃப் பேம்" விருது பெற்றதற்கு ட்ராவிட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “வாழத்துகள் ராகுல் டிராவிட். இதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்தான். இறுதியாக வால் ஹாலை பெற்றது” என பதிவிட்டுள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP