ஓய்வுக்கு பிறகு தடம் மாறினார் உசைன் போல்ட்

ஓய்வுக்கு பிறகு தடம் மாறினார் உசைன் போல்ட்
 | 

ஓய்வுக்கு பிறகு தடம் மாறினார் உசைன் போல்ட்


ஓட்டப்பந்தயத்தின் மின்னல் மனிதன் என்று போற்றப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், ஓய்வுக்கு பிறகு தனது நீண்ட நாள் கனவை நினைவாக்க தயாராகி விட்டார். 

ஓட்டப்பந்தயத்தில் கிங்காக இருந்த போல்ட்டுக்கு, பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட்க்கு விளையாட வேண்டுமென்பது அவரது கனவாக இருந்தது. இதனை நிறைவேற்றுவதற்கான முதல் அடியை அவர் தற்போது எடுத்து வைத்துள்ளார். ஜெர்மனியின் போர்ஷ்யா டோர்ட்மன்ட் கால்பந்து அணியில் விளையாடுவதன் மூலம், கால்பந்தில் தான் எந்த அளவில் இருக்கிறார் என்பதை தனுக்கு தானே பரீட்சை வைத்துக் கொள்ள இருக்கிறார். மார்ச் மாதம் டோர்ட்மன்ட் அணி, பன்டெஸ்லிகா ஜெயிண்ட்ஸ் அணியுடனான போட்டி நடக்கிறது. இந்த போட்டியை புமா நிறுவனம் நடத்துகிறது. போல்ட்டின் ஸ்பான்சரும் இந்நிறுவனம் தான். 


இது குறித்து உசைன் போல்ட் கூறுகையில், "மார்ச் மாதம், என்னுடைய ட்ரைல் மேட்ச்சுக்காக டோர்ட்மன்ட் அணியில் இடம் பெற்று விளையாடுகிறேன். இது எனது வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நிர்ணயிக்கும். அவர்கள் நான் நன்றாக விளையாடுகிறேன் என்று சொன்னால், எனக்கு கூடுதல் பயிற்சி தேவை. நான் இதை செய்வேன். இது எனக்கு பதற்றத்தை கொடுக்கிறது. நான் எப்போதும் பதற்றமடைய மாட்டேன். இது புதுமை. கால்பந்து போட்டியாகும். இதில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும். ஒருமுறை அதில் செட் ஆகிவிட்டால், பிறகு பழகிவிடும். எனக்கு மிகவும் பிடித்த அணி மான்செஸ்டர் யுனைடெட். அந்த அணியில் விளையாடுவது எனது மிகப்பெரிய கனவு" என்று கூறினார்.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் மேலாளர் அலெக்ஸ் பெர்குசனிடம் போல்ட் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பெர்குசன், போல்ட் பிட் மற்றும் தயாராக இருந்தால், நான் என்னால் முடிந்ததை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP