முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்!

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
 | 

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்!

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்!முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இதில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்தது. 

முதலில் விளையாடிய வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது.167 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும், தவானும் களம் இறங்கினர். 2.4 ஓவரில் தவான் அவுட் ஆனார். அவர் 10 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்!

ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்து ஆடினார். இந்த ஜோடி ஓரளவுக்கு நீடித்து விளையாடியது. ஆனால், 9.3 ஓவரில் ராகுல் அவுட் ஆனார். கடைசி வரை இழுபறியாக ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 12 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எப்படியும் இந்தியாவைச் சுருட்டிவிடலாம் என்று வங்கதேசம் நினைத்திருந்தது. 

கடைசி ஓவரின் 5வது பந்தில் விஜய் சங்கர் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை உறைய வைத்தார். கடைசிப் பந்தில், ஐந்து ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இதனால், இந்திய - வங்க தேச ரசிகர்கள் பதற்றத்தின் உச்சத்தில் காத்திருந்தனர். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்துப் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தினேஷ் கார்த்திக். இதன்மூலம், இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்!

இந்த தோல்வியால் வங்கதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஸ்டேடியத்திலேயே கதறி அழுதனர். இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியில், வங்கதேசம் இலங்கையை எதிர்கொண்டது. அதில், இலங்கையை வீழ்த்திய வங்கதேச வீரர்கள், பாம்பு நடனம் போல ஸ்டேடியத்தில் ஆடியது இலங்கை ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இன்றைய போட்டியில் வங்கதேசம் தோல்வியைத் தழுவியதை இந்திய ரசிகர்களுடன் சேர்ந்து இலங்கை ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். வங்க தேசத்தின் பாம்பு நடனத்தை வைத்து மீம்ஸ்களும் சோஷியல்மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP