இது தான் வெற்றிக்கு சரியான நேரம்: கோலி

இது தான் வெற்றி பெறுவதற்கான சரியான நேரம் என்ற நேற்றைய வெற்றிக்கு பின் கோலி தெரிவித்தார்.
 | 

இது தான் வெற்றிக்கு சரியான நேரம்: கோலி

இது தான் வெற்றிக்கு சரியான நேரம்: கோலிஇது தான் வெற்றி பெறுவதற்கான சரியான நேரம் என்ற நேற்றைய வெற்றிக்கு பின் கோலி தெரிவித்தார். 

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த கோலி நேற்றைய போட்டியில் எதிரணியை மிரட்டினார். மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்சும் தன் பங்குக்கு அதிரடியை காட்டி அணியை வெற்றி பெற செய்தார். 

வெற்றிக்கு பின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ''தற்போது எங்களுக்கு வெற்றி பெறுவதற்கான சரியான நேரம். இந்த மைதானத்தில் விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. டெல்லி அணியை விட எங்களுக்கு ஆதரவு அதிகமாக இருந்ததை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இந்த போட்டியிலும் பந்துவீச்சு சரியாக இல்லை. அவர்களை 160 ரன்களிலேயே நிறுத்திருக்க வேண்டும். ஆனால் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். 

முதலில் பந்துவீசுவது நல்ல முடிவு என தான் நினைக்கிறேன். இரண்டாம் கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வது சரியாக இருக்கும். ஆட்டத்தின் முதல் பாதிக்கு பிறகு எங்கள் அணி பந்துவீச்சால் நான் நம்பிக்கை இழந்து தான் இருந்தேன். ஆனால் ஏபிடி வில்லியர்ஸ், இந்த போட்டியில் நாம் நிச்சயம் ஜெயிப்போம் என்று நம்பிக்கை கொடுத்தார். அவருடன் பேட்டிங் செய்வது எப்போதும் சிறப்பான அனுபவம் தான்'' என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP