ப்ரோ கபடி லீக் ஆறாவது சீசனின் தேதி மாற்றம்!

ப்ரோ கபடி லீகின் ஆறாவது சீசன் போட்டி வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்க இருப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது போட்டி அக்டோபர் 7ம் தேதி துவங்கும் என மார்ஷல் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
 | 

ப்ரோ கபடி லீக் ஆறாவது சீசனின் தேதி மாற்றம்!

ப்ரோ கபடி லீக் தொடக்க தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போட்டியை நடத்தும் மார்ஷல் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ப்ரோ கபடி லீகின் ஆறாவது சீசன் போட்டி வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்க இருப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது போட்டி அக்டோபர் 7ம் தேதி துவங்கும் என போட்டியை நடத்தும் மார்ஷல் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் துவக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. 

கொச்சியில் டிசம்பர் 30-31 பிளே-ஆப் சுற்றுகள் நடைபெறும். அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி இறுதிச் சுற்று ஆட்டம் மும்பையில் நடக்கிறது. 

ப்ரோ கபடி லீக் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP