தோனியின் கேப்டன்ஷிப் திறனை கண்டறிந்த தருணம்- மனம்திறக்கும் சச்சின்

தோனியிடம் கேப்டன்ஷிப் திறன் இருப்பதை தான் எப்போது கண்டறிந்தேன் என்பதை சச்சின் பகிர்ந்துள்ளார்.
 | 

தோனியின் கேப்டன்ஷிப் திறனை கண்டறிந்த தருணம்- மனம்திறக்கும் சச்சின்

தோனியின் கேப்டன்ஷிப் திறனை கண்டறிந்த தருணம்- மனம்திறக்கும் சச்சின்

தோனியிடம் கேப்டன்ஷிப் திறன் இருப்பதை தான் எப்போது கண்டறிந்தேன் என்பதை சச்சின் பகிர்ந்துள்ளார். 

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். 2007ம் ஆண்டு அவரிடம் கேப்டன் பொறுப்பை தரும் போது அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருந்திருக்கும். ஆனால், ஐசிசி-ன் மூன்று கோப்பைகளை பெற்று தந்த முதல் கேப்டன் என்ற பெறுமை அவரையே சாரும். இவரது கேப்டன்ஷிப்பில் அசந்துபோய், பல சீனியர் கேப்டன்கள் இவரை புகழ்ந்ததுண்டு. ஆனால், யாரை பார்த்து கேப்டனாக உயர்ந்தாரோ அவர் எப்படி தோனியிடம் கேப்டன்ஷிப் திறன் இருப்பதை கண்டறிந்தார் என்பதை அறியும் போது சிலிர்த்து போகும். தோனி, தனது சிறுவயதில் இருந்தே சச்சினை தான் தனது முன்னோடியாக கருதி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 


பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்னும் நிகழ்ச்சியில், கவுரவ் கபூருடன், சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது தோனியை பற்றி பேசிய சச்சின், "நெருக்கடியான நேரங்களில் நான் பீல்டிங் பற்றி எப்போதும் தோனியிடம் ஆலோசனை செய்வேன். என்னுடைய கருத்துக்களை முன்வைத்து அது சரியாக இருக்குமா என்று கேட்பேன். அந்த சமயம் தோனி கூறும் யோசனைகள் கண்டு தான், அவரிடம் சிறந்த கேப்டன்ஷிப் திறன் இருப்பதை கண்டறிந்தேன்" என்றார். 

இதற்கிடையே கவுரவ் குறுக்கிட்டு, "அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை... அது வேலைக்கான நேர்காணல் என்று" என ஜோக் செய்தார். மேலும், ஒருமுறை சச்சின் ஒரு நல்ல ஆதரவாளர். நான் ஒரு கேப்டனாக இருக்க அவர் தான் காரணம் என்று தோனி குறிப்பிட்டதை, சச்சினிடம் கவுரவ் தெரிவித்தார்.

சச்சின் தலைமையிலான இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்ற மனவருத்தம் ரசிகர்கள் மட்டுமின்றி சச்சினுக்கும் இருந்தது. ஆனால், தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த சச்சினுக்கு, 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்து, தோனி கௌரவித்திருந்தார். அந்த தருணங்கள் இன்னும் நம் கண்முன் வந்து செல்லும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP