ஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்!

2018 ஐபிஎல் தொடரில் முதல் வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்புட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
 | 

ஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்!

ஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்!2018 ஐபிஎல் தொடரில் முதல் வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்புட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அங்கித் ராஜ்புட், 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட் எடுத்த 17வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 2008ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சோஹில் தன்வீர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் சாய்த்ததே இதுவரை சாதனையாக உள்ளது. அவரை தொடர்ந்து புனே அணிக்காக 2016ல் விளையாடிய ஜம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP