டெஸ்ட் தரவரிசை: ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிப்பு; 2ம் இடத்தில் கோலி!

சர்ச்சைக்குரிய தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 | 

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றுள்ள, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி நீடித்து வருகிறார். முதலிடத்தை பிடிக்க கோலிக்கு இன்னும் 17 புள்ளிகளே தேவையாக உள்ளது. 

டெஸ்ட் தரவரிசை: ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிப்பு; 2ம் இடத்தில் கோலி!

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் இறங்கு 4-வது இடத்தை பிடிக்க, 3-வது இடத்தை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பிடித்தார். 5-வது இடத்தில் ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் உள்ளார். 6-வது இடத்தில் தெ.ஆ-வின் ஏபி டி வில்லியர்ஸ், 7-வது இடத்தில் இந்தியாவின் புஜாரா, 8-வது இடத்தில் தெ.ஆ-வின் டீன் எல்கர் ஆகியோர் உள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தெ.ஆ-வின் துவக்க வீரர் ஏதேன் மார்க்ரம், பாகிஸ்தானின் அசார் அலி மற்றும் தெ.ஆ-வின் ஹாசிம் ஆம்லாவை தள்ளிவிட்டு 9-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில், தெ.ஆ வீரர் காகிஸோ ரபாடா முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸி.க்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்ட தெ.ஆ ஆல்-ரவுண்டர் வெர்னோன் பிளந்தர் 3-வது இடத்திற்கு முன்னேறினார். ஜடேஜா, அஷ்வின் 4-வது மற்றும் 5-வது இடங்களின் முறையே உள்ளனர்.

டெஸ்ட் தரவரிசை: ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிப்பு; 2ம் இடத்தில் கோலி!

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 6-வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் இருந்து வெளியேறிய தெ.ஆ-வின் மோர்னே மோர்கெல் 7-வது, நியூசிலாந்தின் ட்ரெண்ட் பௌல்ட 8-வது, இலங்கையின் ரங்கனா ஹெராத் 9-வது, நியூஸி.யின் நீல் வாக்னர் 10-வது இடத்திலும் இருக்கின்றனர். 

ஆல்-ரவுண்டர் பட்டியலில், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஜடேஜா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். அஷ்வினை 4-வது இடத்துக்கு தள்ளி தெ.ஆ ஆல்-ரவுண்டர் வெர்னோன் பிளந்தர் 3-வது இடத்தை பிடித்தார். 5-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP