டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா, பாகிஸ்தானுக்கு நோ சொல்லும் ஐசிசி

ஐசிசி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று போட்டி 2021ம் ஆண்டு நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதற்கான லீக் போட்டிகள் 2019-20ல் நடைபெறும். ஆனால், இந்த போட்டியில் அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் இருக்காது என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
 | 

கொல்கத்தாவில் நடந்த காலாண்டு மாநாட்டிற்கு பிறகு பேசிய ரிச்சர்ட்சன், "இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான பிரச்னை மிகவும் சிக்கலானது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பாகத்தில் இரு அணிகளும் மோத வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் லீக் ஆட்டங்கள் ஆறு தொடர்களாக நடக்கும். அதில் ஒவ்வொரு அணியும், மூன்று போட்டிகள் உள்ளூரிலும், மூன்று போட்டிகள் வெளியூரில் விளையாடும். 

இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் போட்டி நடக்க வேண்டும் என்கிற பொதுவான ஆசை அனைவரது மத்தியிலும் இருக்கிறது. ஆனால், இரு தரப்பு நாடுகளுக்கு இடையில் உள்ள பிரச்னை சிக்கலாக உள்ளது. அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை குறித்து விசாரணை நடக்கிறது. அப்போது நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP