டென்னிஸ் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ரஃபேல் நடால்!

ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
 | 

டென்னிஸ் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ரஃபேல் நடால்!

டென்னிஸ் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ரஃபேல் நடால்!

ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருந்த ரஃபேல் நடால், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறினார். அதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, பிப்ரவரி மாதம் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதலிடத்தை பிடித்தார். 

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த மியாமி ஓபன் போட்டியின் இரண்டாவது சுற்றில் பெடரர் தோல்வி அடைந்தார். இதனால் 10 புள்ளிகளை இழந்த அவர், ஏடிபி தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக இரண்டாவது இடத்தில் இருந்த நடால், மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். 

மியாமி ஓபன் பட்டம் வென்ற ஜான் இஸ்னர் 9-வது இடத்தை பெற்றுள்ளார். இஸ்னரிடம் தோல்வி அடைந்த ஸ்வேரெவ், ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தில் இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP