டென்னிஸ் தரவரிசை: ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்

உலக டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
 | 

டென்னிஸ் தரவரிசை: ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்

டென்னிஸ் தரவரிசை: ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்

உலக டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். ஐந்தாவது முறையாக முதலிடத்தை பெடரர் தக்கவைத்துள்ளார். பிப்ரவரி 2, 2004 முதல் ஆகஸ்ட் 17, 2008 (237 வாரங்கள்); ஜூலை 6, 2009 முதல் ஜூன் 6, 2010 (48 வாரங்கள்); ஜூலை 9 முதல் நவம்பர் 4, 2012 (17 வாரங்கள்); மற்றும் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 1, 2018 (6 வாரங்கள்) வரை முதலிடத்தில் பெடரர் இருந்துள்ளார்.

மாட்ரிட் ஓபன் காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால், நம்பர் ஒன் இடத்தில் இருந்த ரஃபேல் நடால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மாட்ரிட் ஓபன் பட்டம் வென்ற அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 12ம் இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2007ம் ஆண்டுக்கு பிறகு முதல் 15 இடத்திற்கு வெளியே ஜோகோவிச் தள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

பெண்கள் பிரிவில், ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். செக் குடியரசின் கிவிடோவா இரண்டு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், மாட்ரிட் ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஐந்து இடம் ஏற்றம் கண்டு 15-வது இடத்தையும், ரஷ்ய வீராங்கனை ஷரபோவா 12 இடங்கள் ஏற்றதால் 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டென்னிஸ் தரவரிசை: ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்

இந்திய வீரர்களில், ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி 8 இடங்கள் சரிந்து 94-வது இடத்தை பிடித்துள்ளார். சசிகுமார் முகுந்த் 45 இடங்கள் முன்னேறி 377-வது இடத்தை பெற்றுள்ளார். ராம்குமார் ராமநாதன் 124-வது இடத்தையும், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 175-வது இடத்தையும், சுமித் நாகல் 226-வது இடத்தையும், அர்ஜூன் காதே 371-வது இடத்தையும், சகெத் மைனெனி 441-வது இடத்தையும், சுந்தர் பிராஷாந்த் 467-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 7 இடம் முன்னேறி 187-வது, கர்மான் கவுர் 16 இடம் ஏற்றம் கண்டு 254-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். 

இரட்டையர் பிரிவு வீரர்களில், ரோஹன் போபண்ணா 23-வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் இரண்டு இடம் சரிந்து 44-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் ஒரு இடம் பின்தங்கி 51-வது இடத்திலும் உள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP