நடுவரின் சேரை பேட்டால் உடைத்த டென்னிஸ் வீராங்கனை

தவறான முடிவை அறிவித்த நடுவரின் சேரை பேட்டால் அடித்து உடைத்தார் செக் குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா.
 | 

நடுவரின் சேரை பேட்டால் உடைத்த டென்னிஸ் வீராங்கனை

தவறான முடிவை அறிவித்த நடுவரின் சேரை பேட்டால் அடித்து உடைத்தார் செக் குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா.

ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மற்றும் கிரீஸ்ஸின் மரியா சக்கரி மோதினர். 

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா மூன்றாவது செட்டில் சர்வ் செய்த பந்து கோட்டிற்குள் விழுந்தது. ஆனால் லைன் நடுவர் மற்றும் அம்பயர் கோட்டிற்கு வெளியே விழுந்ததாக முடிவை அறிவித்தனர். 

பெரிய திரையில் கரோலினா சரியாக பந்தை வீசியது தெரிந்தும் நடுவர்கள் தவறான முடிவை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் நடுவரிடம் இதுகுறித்து கரோலினா வாக்குவாதம் செய்தார். ஆனால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் கரோலினா தரவரிசையில் 42வது இடத்தில் இருக்கும் சக்கரியிடம் 3-6, 6-3, 7-5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார். 

தோல்விக்கு பின் சக்கரிக்கு வாழ்த்து தெரிவித்த கரோலினா நடுவரின் சேர் அருகே சென்று தனது பேட்டால் வேகமாக உடைக்க துவங்கினார். அரங்கத்தில் இருந்தவர்கள் யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கரோலினாவின் சகோதரியும், டென்னிஸ் வீராங்கனையுமான கிரிஸ்டின் கரோலினா, ''நான் பார்த்ததில் மிகவும் மோசமான முடிவு இது. நடுவர் மார்த்தா இனி நானோ, கரோலினாவோ விளையாடும் போட்டிகளில் நடுவராக இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP