பெண்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு

ஐ.பி.எல் போட்டியில் நடக்க இருக்கும் பெண்கள் டி20 போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 | 

பெண்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு

பெண்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு

ஐ.பி.எல் தொடரில் நடக்க இருக்கும் பெண்கள் டி20 போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

11-வது ஐ.பி.எல் போட்டியில் முதல் தகுதிச் சுற்றுக்கு பிறகு, கண்காட்சிக்காக பெண்கள் டி20 போட்டி நடத்தப்பட உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் பெண்கள் ஐ.பி.எல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கான முன்னூட்டமாக இப்போட்டி இருக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பெண்கள் டி20 போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும்.

கேப்டன்களாக இந்திய வீராங்கனைகள் ஹர்மான் ப்ரீத், மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளனர். மந்தனா அணிக்கு ட்ரயல்ப்ளேசர்ஸ் மற்றும் ஹர்மான்ப்ரீத் அணிக்கு சூப்பர்நோவாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ட்ரயல்ப்ளேசர்ஸ் அணிக்கு துஷார் ராதே பயிற்சியாளராகவும், சூப்பர்நோவாஸுக்கு பிஜு ஜார்ஜ் பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அணிகளையும் சேர்த்தால், 10 வெளிநாட்டு உள்பட 26 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

பெண்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு

சூப்பர்நோவாஸ் அணி: ஹர்மான்ப்ரீத் கவுர் (கேப்டன்), டேனியில்லே வ்ய்ட், மித்தாலி ராஜ், மெக் லென்னிங், சோஃபி டேவின், எல்லிஸ் பெர்ரி, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், பூஜா வஸ்திரக்கர், மேகன் ஸ்சுட், ராஜேஸ்வரி கயாக்வாத், அனுஜா பட்டில், தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்).

ட்ரயல்ப்ளேசர்ஸ் அணி: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), அலிஸ்ஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), சுசீ பேட்ஸ், தீப்தி சர்மா, பெத் மூனே, ஜெமிமாஹ் ரோட்ரிகோஸ், டேனியில்லே ஹஸில், ஷிகா பாண்டே, லீ தாஹூஹூ, ஜூலன் கோஸ்வாமி, ஏக்தா பிஷ்த், பூனம் யாதவ், தயாளன் ஹேமலதா.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP