பிசிசிஐ- நிர்வாகக்குழு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் வாரியம் - லோதா கமிட்டியின் வழக்கை ஜூலை மாதம் ஒத்திவைத்துள்ளது.
 | 

பிசிசிஐ- நிர்வாகக்குழு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

பிசிசிஐ- நிர்வாகக்குழு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் வாரியம் - லோதா கமிட்டியின் வழக்கை ஜூலை மாதம் ஒத்திவைத்துள்ளது. 

பிசிசிஐ-ன் விதிமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள, லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதனை அடுத்து பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர நிர்வாகக் குழு பரிந்துரைத்தது. அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு, அந்த மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால், நிர்வாகக்குழுவின் பரிந்துரைகளை பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்தன. 

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த 1ம் தேதி விசாரணையின் போது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை மாநில கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் மே 11-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். புதிய விதிமுறையின் இறுதி வடிவம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டதாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

இந்த நிலையில், நேற்று இவவழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற ஜூலை மாதம் 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP