வெற்றியோ தோல்வியோ ஒன்றாக இருப்போம்: விராட் கோலி

இந்தாண்டு பிளேஆஃப் வாய்ப்பை இழந்ததை அடுத்து ''வெற்றியோ தோல்வியோ ஒன்றாக இருப்போம்'' என்று ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 | 

வெற்றியோ தோல்வியோ ஒன்றாக இருப்போம்: விராட் கோலி

வெற்றியோ தோல்வியோ ஒன்றாக இருப்போம்: விராட் கோலிஇந்தாண்டு பிளேஆஃப் வாய்ப்பை இழந்ததை அடுத்து ''வெற்றியோ தோல்வியோ ஒன்றாக இருப்போம்'' என்று ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடங்கியது முதல் எத்தனை சிறப்பான வீரர்களை வைத்திருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் இந்தாண்டு நமக்கு தான் கோப்பை என்று எதிர்பார்த்து காத்திருக்கும் பெங்களூரு ரசிகர்களுக்கு அந்த அணி பிளே ஆஃப் வரை வந்து பின்னர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளிக்கும். 

ஆனால் இந்த முறை விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி பிளேஆஃப் வரைக் கூட செல்லவில்லை. விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்டு இருக்கும் இந்த அணியால் ஏன் வெல்ல முடியவில்லை என்று ஒருபுறம் கேள்விகள் வர, மற்றோருப்பக்கம் "ஈ சாலா கப் அடுத்த வருடம் நம்தே" என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

இந்நிலையில் தனது அணியின் வீரர்களுக்காக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதில், ''வெற்றியோ தோல்வியோ நாம் எப்போதும் இணைந்திருப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP