மீண்டும் களத்தில் இறங்குகிறார் இலங்கை கேப்டன் மேத்தியூஸ்

காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து நான்கு மாதங்கள் விலகியிருந்த இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் மீண்டும் களமிறங்குகிறார்.
 | 

இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்காக, 2019ம் ஆண்டு உலக கோப்பை வரை கேப்டனாக ஏஞ்சலோ மேத்தியூஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால், தொடர்ந்து தொடை மற்றும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மேத்தியூஸ் சுமார் நான்கு மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். 

கடந்த ஜனவரி மாதம், வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேத்தியூஸ் ஒரே ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்றார். அதன் பின் தொடையில் ஏற்பட்ட காயத்தின் வலி அதிகமானதால் நாடு திரும்பினார். இதன் பின் நடைபெற்ற நிடாஹஸ் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதுகு காயம் அவரை போட்டியில் பங்கேற்க விடவில்லை. இந்த நிலையில் மீண்டும் களத்தில் இறங்க தான் தயாராகிவிட்டதாக மேத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து வரும் முதல்தர போட்டியில் அவர் விளையாட இருக்கிறார்.

அவர் கூறுகையில், "நான் மீண்டும் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னுடைய காயத்தில் இருந்து விடுபட எனக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP