விளையாட்டு ஆணையத்தின் டாப் திட்டம்: சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் சஞ்சிதா சானு மற்றும் டென்னிஸ் வீரர் யுகி பாம்ப்ரி, டாப் (டார்கெட் ஒலிம்பிக் போடியம்) திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
 | 

விளையாட்டு ஆணையத்தின் டாப் திட்டம்: சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் சஞ்சிதா சானு மற்றும் டென்னிஸ் வீரர் யுகி பாம்ப்ரி, டாப் (டார்கெட் ஒலிம்பிக் போடியம்) திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவின், 'ஏ' மாதிரி டெஸ்ட்டில் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அவர் தற்போது, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரை டாப் திட்டத்தில் இருந்து நீக்குவதாக, இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

யுகி பாம்ப்ரி, நடைபெற உள்ள ஆசிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஆசிய போட்டியும், யுஎஸ் ஓபன் போட்டியும், ஒரே சமயத்தில் நடக்க இருப்பதால், ஆசிய போட்டியை பாம்ப்ரி புறக்கணித்துள்ளார். இதனால் ஆல் இந்திய டென்னிஸ் சங்கம், ஆசிய போட்டியில் இருந்து பாம்ப்ரிக்கு விலக்களித்துள்ளது. ஆசிய போட்டியில் பாம்ப்ரி பங்கேற்காததால், இந்திய விளையாட்டு ஆணையம் அவரை டாப் திட்டத்தில் இருந்து நீக்கியது. 

ஆண்கள் இரட்டையர் ஸ்பெஷலிஸ்ட் டிவிஜ் ஷரன், ஆசிய போட்டியின் முடிவு வரை டாப் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த மிஷன் ஒலிம்பிக் செல் கூட்டத்தில், ஆசிய போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பயிற்சி, உபகரணங்கள் போன்ற தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டது. 

அதன்படி, இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணாவுக்கு, மே 7ம் தேதி முதல் 12 வாரங்களுக்கு, அவருடைய பயிற்சி மற்றும் ஃபிசியோவுக்காக ரூ. 26.03 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

ட்ராப் துப்பாக்கி சுடு வீரர்கள், ஷ்ரேயாசி சிங், சீமா தோமர், மானவ்ஜித் சிங் சந்து, அன்குர் மிட்டல் மற்றும் ஷர்டுல விஹானின் பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்பதனால், ரூ. 65.42 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சுடு வீரர் அனிஷ் பன்வலாவுக்கு ரூ. 1.43 லட்சம், பளுதூக்கு வீரர்கள் மீராபாய் சானு, ராகி ஹைதர், ஜெரேமி மற்றும் பர்தீப் சிங்கிற்கு ரூ.1.76 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. 

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ. 4.91 லட்சம், வில்லாளர்கள் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா, அதனு தாஸ், தீபிகா குமாரி, பாம்பேலா தேவி ஆகியோருக்கு ரூ. 9.53 லட்சத்தையும் ஆணையம் வழங்கி இருக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP