காமன்வெல்த் போட்டியில் தண்டனையில் இருந்து தப்பித்த வீரர்கள்!

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றிருக்கும் இந்திய குத்துச்சண்டை அணி மருத்துவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 | 

காமன்வெல்த் போட்டியில் தண்டனையில் இருந்து தப்பித்த வீரர்கள்!

காமன்வெல்த் போட்டியில் தண்டனையில் இருந்து தப்பித்த வீரர்கள்!

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றிருக்கும் இந்திய குத்துச்சண்டை அணி மருத்துவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நாளை (4ம் தேதி) காமன்வெல்த் போட்டிக்கான துவக்க விழா நடக்கிறது. வரும் 5ந் தேதி முதல் போட்டிகள் நடைபெறுகின்றன. காமன்வெல்த் போட்டியில் நோ-நீடில் கொள்கை இருக்கிறது. அதாவது போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசியை பயன்படுத்த கூடாது என்பது தான். இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத வீரர்-வீராங்கனைகள் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஊசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஊசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த ஊசி, இந்திய குத்துச்சண்டை வீரர் தங்கியிருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது. இதனை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டதில், ஊக்கமருந்து தொடர்பான எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை என்றும் சத்துமருந்து செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் யாரும் ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என்று தெரியவந்தது. 

இதனிடையே, இந்திய குத்துச்சண்டை அணி மருத்துவராக இருக்கும் அமோல் பட்டில், இந்த விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய குத்துச்சண்டை வீரர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பட்டில் அவருக்கு வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மருந்தை ஊசி மூலம் ஏற்றிவிட்டு, அதனை முறையாக அப்புறப்படுத்தாமல் அப்பகுதிலேயே வீசிவிட்டு சென்றுள்ளார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 

இந்த சம்பவத்திற்கு காமன்வெல்த் விளையாட்டு சங்கம் அமோல் பட்டிலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலே ஊசி பயன்படுத்தியதால் வீரர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP