டி20 போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் கூல் தோனி!

2018 ஐ.பி.எல் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் நேற்று புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
 | 

டி20 போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் கூல் தோனி!

டி20 போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் கூல் தோனி!

2018 ஐ.பி.எல் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் நேற்று புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி, 4000 ஐ.பி.எல் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டும் ஏழாவது ஐ.பி.எல் வீரர் தோனி ஆவார். 

பேட்ஸ்மேனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் தோனி சாதனை படைத்தார். பஞ்சாபுக்கு எதிராக பீல்டிங்கில் இருந்த போது, விக்கெட் கீப்பர் தோனி 3 கேட்ச்களை பிடித்தார். கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் மற்றும் அஷ்வின் ஆகியோரது கேட்ச்களை பிடித்திருந்தார். இதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்களில், இலங்கையின் குமார் சங்ககாராவை, தோனி பின்னுக்கு தள்ளினார். 

அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள்:-

எம்.எஸ். தோனி (இந்தியா) - 144

குமார் சங்ககாரா (இலங்கை) - 142

தினேஷ் கார்த்திக் (இந்தியா) - 139

கம்ரான் அக்மல் (பாகிஸ்தான்) - 123

டேனிஷ் ராம்டின் (வெஸ்ட் இண்டீஸ்) - 111

நமன் ஒஜ்ஹா (இந்தியா)  - 106

டி20 போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் கூல் தோனி!

அதிக கேட்ச் பிடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை வீரர்களை அவுட்டாக்கிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தை பிடித்துள்ளார். 

அதிக முறை வீரர்களை வெளியேற்றிய விக்கெட் கீப்பர்கள்:

எம்.எஸ். தோனி (இந்தியா) - 216

கம்ரான் அக்மல் (பாகிஸ்தான்) - 215

குமார் சங்ககாரா (இலங்கை) - 202

தினேஷ் கார்த்திக் (இந்தியா) - 192

டேனிஷ் ராம்டின் (வெஸ்ட் இண்டீஸ்) - 155

நமன் ஒஜ்ஹா (இந்தியா) - 130

பில் முஸ்டார்ட் (இங்கிலாந்து) - 130

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP