வைரலாகும் ஸிவா தோனியின் நடன வீடியோ!

தோனியின் மகள் ஸிவா தோனி திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

வைரலாகும் ஸிவா தோனியின் நடன வீடியோ!

தோனியின் மகள் ஸிவா தோனி திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் மற்றும் தொழிலதிபர் நமித் சோனி திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த திருமண நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. 

இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். நேற்றைய மெஹந்தி நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தோனியின் மகள் ஸிவாவின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர் நடனமாடும் வீடியோவை தோனி ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்தார். எப்போதும் போல  இந்த வீடியோவும் ஹிட்டடித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP