ஆடவர் டபிள் ட்ராப் போட்டியில் ஷர்துல் விஹான் வெள்ளி வென்றார்

15 வயதான ஷர்துல் விஹான், ஆசிய விளையாட்டிப் போட்டி ஆடவர் டபிள் ட்ராப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
 | 

ஆடவர் டபிள் ட்ராப் போட்டியில் ஷர்துல் விஹான் வெள்ளி வென்றார்

15 வயதான ஷர்துல் விஹான், ஆசிய விளையாட்டிப் போட்டி ஆடவர் டபிள் ட்ராப் துப்பாக்கிச் சுடு பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

இந்தோனேசியாவின் பலேம்பாங்கில் நடந்து வரும் ஆசிய விளையாட்டிப் போட்டியில், இன்று நடந்த ஆடவர் டபிள் ட்ராப் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் விஹான் 73 ஷாட் அடித்து 2ம் இடம் பிடித்தார். 74 ஷாட் அடித்த கொரியாவின் ஷின் ஹியுன்வூ தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 53 ஷாட் அடித்த கத்தாரின் அல் மாற்ரி ஹம்த் அலி 3-வது இடத்தை பிடித்தார். 

மகளிர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. மகளிர் டபிள் ட்ராப் பிரிவில், ஷ்ரேயாஸி சிங், 121 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்தார். வர்ஷா வர்மன் 120 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பெற்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP