குளிர்கால ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஷிவா கேசவன் ஓய்வு

குளிர்கால ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஷிவா கேசவன் ஓய்வு
 | 

குளிர்கால ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஷிவா கேசவன் ஓய்வு


தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் வருகிற 9ம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கிறது. இதனுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இந்திய லூஜ் வீரர் ஷிவா கேசவன் அறிவித்துள்ளார். 

1998ம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் கேசவனின் 6-வது ஒலிம்பிக் போட்டி இதுவாகும். 2011, 2012, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டங்களை கேசவன் வென்றுள்ளார். நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில், முதல்முறையாக தனக்கென்ற பிரத்யேக பயிற்சியாளருடன் கேசவன் களமிறங்குகிறார். 2006ம் ஆண்டு, ஒலிம்பிக்கில் 25-வது இடம் பிடித்திருந்ததே கேசவனின் சிறந்த போட்டியாக அமைந்தது.  

ஓய்வு குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் போட்டியிட்டுள்ளேன். ஆனால், தற்போது இதிலிருந்து விலக நினைக்கிறேன். அதனால், இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிதான் என்னுடைய கடைசி சர்வதேச போட்டியாக  இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜெர்மனில் நடந்த ஒரு போட்டியின்போது விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து இன்னும் முழுவதுமாக மீளவில்லை. 

என்னுடைய போட்டி நடக்கும் 10,11 தேதிகளுக்குள் முழு உடற்தகுதியை பெற்றுவிடுவேன் என்று நம்புகிறேன். குளிர்கால ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு முறை, தேசிய கொடியை ஏந்தியுள்ளேன். இந்த கௌரமிக்க தருணத்தை இனி தவறவிட இருப்பது வேதனையை தருகிறது. கோடைகால ஒலிம்பிக் போட்டியை போல இந்திய வீரர்கள், குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் அதிகம் பங்கேற்க வேண்டும்" என்று கேசவன் கூறினார். 

36 வயதாகும் கேசவனின் தந்தை இந்தியாவின் கேரளாவையும், தாய் இத்தாலியையும் சேர்ந்தவர். ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியில் பிறந்து, வளர்ந்தவர் கேசவன். இவர் ஆசிய லூஜ் போட்டியின் நடப்பு சாம்பியனும், வேகத்தில் உலக சாதனையாளரும் ஆவார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP