புத்தாண்டு வாழ்த்து சொன்ன ஷமி - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கைஃப் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் சொன்னதற்காக ட்விட்டரில் நெட்டிசன்களின் தாக்குதலுக்கு ஆளானார். தற்போது அந்த வரிசையில் மற்றொரு வீரர் இணைந்துள்ளார்.
 | 

புத்தாண்டு வாழ்த்து சொன்ன ஷமி - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கைஃப் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னதற்காக ட்விட்டரில் நெட்டிசன்களின் தாக்குதலுக்கு ஆளானார். தற்போது அந்த வரிசையில் மற்றொரு வீரரான ஷமியும் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தற்போது உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணி சார்பாக விளையாடி வருகிறார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷமி பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தி அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் ஷமி, "மகிழ்ச்சியையும், நல்ல செய்திகளையும் புத்தாண்டு புதுப்பிப்பது போல், உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியின் ஆன்மா எப்போதும் ஒளி வீசி கொண்டிருக்கும். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.


மேலும், அதனோடு ஹாப்பி நியூ இயர் என ஆங்கிலத்தில் பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை கூர்ந்து கவனித்தால் சிவ லிங்கம் ஒன்றின் மீது இவ்வாறு வாழ்த்து செய்தி வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியும். இதனை அடுத்து இஸ்லாத்துக்கு எதிரான செயலில் ஷமி ஈடுபட்டதாக நெட்டிசன்கள் பலரும் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சிலர் ஷமி இந்துவாக மாறி விட்டதாகவும், அல்லாவின் கோபத்திற்கு ஆளாகி விட்டதாகவும் கூறி உள்ளனர். சிலரோ மக்களின் கவனத்தை ஈர்க்க இது போன்று அவர் செய்ததாக திட்டி உள்ளனர். ஷமி இதற்கு முன்னரும் ட்விட்டர்வாசிகள் பலரின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். தனது மகளின் பிறந்தநாள் புகைப்படம், தன் மனைவியின் புகைப்படம் போன்றவற்றை ட்விட்டரில் பகிர்ந்த போதும் பலர் இது போன்று ஷமிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP