செர்பியன் இளைஞர் குத்துச்சண்டை: 7 தங்கத்துடன் இந்தியா முதலிடம்

செர்பியாவில் நடைபெற்ற இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
 | 

செர்பியன் இளைஞர் குத்துச்சண்டை: 7 தங்கத்துடன் இந்தியா முதலிடம்

செர்பியாவில் நடைபெற்ற இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 

செர்பியாவின் சுபாட்டிக்கா நகரில் 36-வது வோஜ்வோடினாவின் கோல்டன் குளோவ் இளைஞர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டி முற்றிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் - வீராங்கனைகள், அணியை முதலிடம் பிடிக்கச் செய்தனர். 

17 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், இந்தியாவின் ஆடவர் பிரிவில் நான்கு மற்றும் மகளிர் பிரிவில் மூன்று தங்கப்பதக்கங்கள் வெல்லப்பட்டன. இந்திய அணி, 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்றது. 

ரஷ்யா 11 பதக்கங்கள் (3 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றிருந்தும், கஜகஸ்தானுக்கு பின் 3-வது இடத்தை பிடித்தது. கஜகஸ்தான், 7 பதக்கங்களில் 5 தங்கப்பதக்கங்களை வென்றது. 

இந்திய தரப்பில் தங்கம் வென்ற போட்டியாளர்கள்:- அமன் (+91 கிலோ), ஆகாஷ் குமார் (56 கிலோ),பருன் சிங் (49 கிலோ), விஜயதீப் (69 கிலோ), நீத்து (48 கிலோ), திவ்யா பவர் (54 கிலோ), லலிதா (69 கிலோ).

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP