சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

சாதாரண அரசுப்பள்ளியில் படித்து பல்வேறு சாதனைகளை படைத்த சதீஷ்குமாரின் வாழ்க்கைப்பயணத்தின் சில துளிகள்..
 | 

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதாரண அரசுப்பள்ளியில் படித்து பல்வேறு சாதனைகளை படைத்த அவரது வாழ்க்கைப்பயணத்தின் சில துளிகள்..

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

சதீஷ்குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர். 1992 ஜூன் 23ல் பிறந்தார். பெற்றோர்கள் சிவலிங்கம்- தெய்வானை. தந்தை சிவலிங்கம் ராணுவத்தில் பணியாற்றியவர். சதீஷ்குமார் வேலூர் மாவட்ட அரசுப்பள்ளியில் படித்தார். பி.ஏ. பட்டப்படிப்பை முடித்த போது தெற்கு ரயில்வேயில் கிளார்க்-ஆக சேர்ந்தார்.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

சிறுவயது முதலே பளுதூக்கும் பயிற்சி பெற்ற அவர், 2010ம் ஆண்டு பல்கேரியா, 2011ம் ஆண்டு தென்கொரியா நாடுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். மேலும் 2012, 2013 என பல போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

கடந்த 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ ஆடவர் எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இதில் மொத்தமாக அதிகபட்ச 328 கிலோ எடை தூக்கி முத்திரை பதித்தார். அவரின் சாதனையை பாராட்டி 2015ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

இந்தாண்டு ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியிலும் 77 கிலோ ஆடவர் எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் அவர் இன்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக் ஓலிவருக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது. ஸ்நாட்ச் பிரிவில் 144 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 173 கிலோ எடை என மொத்தமாக இவர் 317 கிலோ எடை தூக்கி சாதனை படைத்தார் சதீஷ்குமார்.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

இதன்மூலம் இந்தியா, காமன்வெல்த் போட்டியில் 3வது இடம் பெற்றுள்ளது. மொத்தமாக 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

மேலும் தொடர்ச்சியாக இரண்டு முறை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையையும் அவர் பெற்றுள்ளார். தமிழக வீரர் சதீஷ்குமார் தங்க பதக்கம் பெற்றதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் .பன்னீர்செல்வம்,எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், வைகோ உள்ளிட்டவரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

மேலும் வேலூரில் உள்ள அவரது பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களின் பேட்டியின் போது சதீஷ்குமாரின் தந்தை, "தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், வேலூர் மாவட்டத்திற்கும், எங்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் சதீஷ்குமார். மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். அவர் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அது நடந்துவிட்டது. என் மகனால் காமன்வெல்த் போட்டியில் நமது இந்திய தேசியக்கொடி பறப்பது பெருமையாக உள்ளது" என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

தாயார் தெய்வானையும், "போட்டிக்கு சில மாதங்களுக்கு முன்பாக சதீஷ்குமாருக்கு காலில் மிகுந்த வலி ஏற்பட்டது. அதிலும் அவர் விடாமல் பயிற்சி எடுத்து வந்தார். அவரது உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற வேண்டியது என்பதே சதீஷ்குமாரின் கனவாக இருந்து வருகிறது. விரைவில் அவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற வாழ்த்துக்களுடன் Newstm.

சோதனைகளைக் கடந்து சாதித்த தமிழக வீரர் சதீஷ்குமாரின் உத்வேகப் பயணம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP