ஒலிம்பிக்ஸ்ஸில் பங்குபெற ரஷ்யாவின் மேல்முறையீடு தள்ளுபடி!

குளிர்கால ஒலிம்பிக்ஸ்; முதல் பதக்கத்தை வென்றது தென் கொரியா!!
 | 

ஒலிம்பிக்ஸ்ஸில் பங்குபெற ரஷ்யாவின் மேல்முறையீடு தள்ளுபடி!


சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் போதைப் மருந்து பயன்படுத்தியதாக ரஷ்யா வீரர், வீராங்கனைகள் தடை செய்யப்பட்டார்கள். ரஷ்ய அரசின் உதவியுடன் போதைமருந்து பயன்பாட்டில் வீரர்கள் ஈடுபட்டிருந்ததால், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் 2018 தென் கொரிய குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற அந்நாட்டிற்கு ஒலிம்பிக்ஸ் கமிட்டி தடை விதித்தது. 

இந்நிலையில், போதை மருந்து சோதனையில் தேர்வான ரஷ்ய வீரர், வீராங்கனைகள் 169 பேர் தென் கொரிய ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற வந்திறங்கினார்கள். அவர்கள் ரஷ்ய வீரர் வீராங்கனைகளாக போட்டியில் பங்குபெற முடியாது. பொது அணியாக ஒலிம்பிக்ஸ் கொடியுடன் களமிறங்குவார்கள். 

இந்நிலையில், தடை செய்யப்பட்ட 47 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற வைக்க, ரஷ்யா ஒலிம்பிக்ஸ் கமிட்டி, சர்வதேச விளையாட்டுத்துறை மேல்முறையீடு நீதிமன்றத்தை அணுகியது. இதை விசாரித்த நீதிபதிகள், ரஷ்யாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்து தடையை நிலை நிறுத்தினர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP