டி20-ல் 300 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா

டி20 போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.
 | 

டி20-ல் 300 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா

டி20-ல் 300 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா

டி20 போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. 

11-வது ஐ.பி.எல் சீசனில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை பதம் பார்த்தது. போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 24 ரன் அடித்தார். 17-வது ஓவரில் விளையாடிய போது, முஜீப் பந்தில் சிக்ஸ் அடிக்கையில், டி20 போட்டியில் 300 சிக்ஸ் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்தார். 

இதுவரை சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் 78 சிக்ஸர்களும், ஐ.பி.எல்-ல் 183 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். மீதமிருக்கும் 40 சிக்ஸர்களை, சாம்பியன்ஸ் லீக் டி20 மற்றும் முஷ்டாக் அலி ட்ராஃபி போட்டிகளில் அவர் அடித்திருக்கிறார். தற்போது அவரிடம் ஒட்டுமொத்தமாக 301 சிக்ஸர்கள் உள்ளன.

மேலும், சர்வதேச அளவில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் 7-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் (844), கிரான் பொல்லார்ட் (525), பிரண்டன் மெக்கல்லம் (445), ட்வயன் ஸ்மித் (367), ஷான் வாட்சன் (357), டேவிட் வார்னர் (319) ஆகியோர் முதல் ஆறு இடங்களில் உள்ளனர். 

ஐ.பி.எல் போட்டியில், கெய்ல் 290 சிக்ஸர் அடித்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் 183 சிக்சருடன் இரண்டாவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி 180 சிக்சருடன் மூன்றாவது, ஏபி டி வில்லியர்ஸ் 179 சிக்சருடன் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றனர்.

ரோஹித் சர்மா, 168 ஐ.பி.எல் போட்டிகளில் 4427 ரன்கள் விளாசியிருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP