ஐ.பி.எல்-ல் 100 பவுண்டரிக்கு மேல் அடித்த முதல் வீரர் ரிஷாப் பன்ட்!

2018 ஐ.பி.எல்-ல் 100 பவுண்டரிகளுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டெல்லியின் ரிஷாப் பன்ட்.
 | 

ஐ.பி.எல்-ல் 100 பவுண்டரிக்கு மேல் அடித்த முதல் வீரர் ரிஷாப் பன்ட்!

ஐ.பி.எல்-ல் 100 பவுண்டரிக்கு மேல் அடித்த முதல் வீரர் ரிஷாப் பன்ட்!

2018 ஐ.பி.எல்-ல் 100 பவுண்டரிகளுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டெல்லியின் ரிஷாப் பன்ட். 

பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது. இப்போட்டியில் டெல்லி அணியின் ரிஷாப் பன்ட் 44 பந்துகளில் 64 ரன் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். 

இந்த சீசனில் பன்ட், 14 போட்டிகளில் 684 அடித்து, ஆரஞ்சு தொப்பியை தக்கவைத்துள்ளார். ஒரு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக, ஒரு சீசனில் அதிக ரன் அடித்த ராபின் உத்தப்பாவை, பன்ட் முந்தியுள்ளார். 2014ம் ஆண்டு ராபின் உத்தப்பா, 660 ரன்கள் விளாசியிருந்ததே, அதிகபட்சமாக இருந்தது.

மேலும், ஐந்து அரைசதங்களையும் பன்ட் பறக்கவிட்டுள்ளார். 37 சிக்ஸர் மற்றும் 68 பவுண்டரிகளையும் பன்ட் அடித்துள்ளார். இதன் மூலம், ஒரு சீசனில் பவுண்டரிக்கு வெளியே பந்துகளை 100-க்கும் மேற்பட்ட முறை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பன்ட் படைத்தார். 

இந்த பட்டியலில் 97 பவுண்டரிகளுடன் கே.எல். ராகுல் (2018- 65 பவுண்டரி, 32 சிக்ஸ்) இரண்டாவது இடத்திலும், 85 பவுண்டரிகளுடன் அம்பதி ராயுடு (2018- 52 பவுண்டரி, 33 சிக்ஸ்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

அதிக ரன் சேர்த்த வீரர்களிலும் பன்ட் முதலிடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் (661) 2-வது, ராகுல் (659 ரன்) 3-வது, அம்பதி ராயுடு (586) 4-வது, ஜோஸ் பட்லர் (549) 5-வது இடத்திலும் இருக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP