அனுஷ்கா சர்மாவுக்கு சாபம் கொடுக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்... கொந்தளிக்கும் விராட் ரசிகர்கள்!

நடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
 | 

அனுஷ்கா சர்மாவுக்கு சாபம் கொடுக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்... கொந்தளிக்கும் விராட் ரசிகர்கள்!


நடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். 

11-வது ஐ.பி.எல் சீசன் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எப்படி போராடினாலும் முடிவு அந்த அணிக்கு பாதகமாக தான் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் வெறும் மூன்று வெற்றிகளை மட்டுமே பெங்களூரு பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கேப்டன் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா, போட்டியை நேரில் காண வருவதால் தான் விராட் பெரிதாக சோபிக்க தவறுகிறார். 

அவர் வரும் போதெல்லாம் போட்டியில் அணி தோற்கிறது. அனுஷ்கா சர்மா ராசியில்லாதவர். ஆன்-ஸ்க்ரீனில் முத்தமிட்டவர்கள் யாரும் நீண்ட காலம் ஒன்றாக இருந்ததில்லை. விரைவில் இந்த திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அனுஷ்கா சர்மாவை சாடி வருகின்றனர். 

அனுஷ்கா சர்மாவுக்கு சாபம் கொடுக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்... கொந்தளிக்கும் விராட் ரசிகர்கள்!

ஆனால், அனுஷ்கா சர்மா பிறந்தநாளில் நடந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அப்போது அனுஷ்கா மைதானத்தில் தான் இருந்தார். வெற்றி பெரும் போது அணியை தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் தோல்வி அடையும் போது அனுஷ்காவை மட்டும் குறிவைத்து குற்றம் சுமத்துவது ஏன் என்று விராட்-அனுஷ்காவின் ஆதரவாளர்கள் கேள்வி கேட்கின்றனர். 

அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் இவ்வாறு பேசுவது இது முதல்முறை அல்ல. திருமணத்திற்கு முன்னர், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அப்போது போட்டியை காண அனுஷ்கா சென்றிருந்தார். அந்த ஆட்டத்தில் விராட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதற்கு முன் நடந்த போட்டியில் சதமடித்த விராட், அனுஷ்கா இருந்த சமயம் வந்த வேகத்திலேயே சென்றது ரசிகர்கள் மத்தியில் கோவத்தை வரவைத்தது.

ஆனால், யார் உனக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் துணையாக இருப்பேன் என்றபடி, மக்களுக்கு மத்தியில் எப்போதும் அனுஷ்காவின் கரம் பிடித்து வரும் விராட், விமர்சனம் செய்பவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தார். மேலும், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த விராட், ட்விட்டரில் அனுஷ்காவை எதிர்த்தவர்களை வறுத்தெடுத்தார். இருப்பினும் அந்த விமர்சனங்கள் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போதும் தொடர்ந்தது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முற்றிலும் இழந்தது. 

அனுஷ்கா சர்மாவுக்கு சாபம் கொடுக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்... கொந்தளிக்கும் விராட் ரசிகர்கள்!

அப்போது விராட்-அனுஷ்கா திருமணமான கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தனர். இதனால், ரசிகர்கள் மேற்கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கினர். இருப்பினும் தற்போது வரை காதல் மனைவியை விட்டுக்கொடுக்காமல் அவரை பாதுகாக்கும் நிழலாகவே விராட் உள்ளார். 

போட்டியில் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒன்று. எப்போதும் போட்டி போட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். அது சொந்த விஷயங்களாக பார்க்கப்படும் போது தான் சர்ச்சைகளும் விமர்சனங்களும்... இதை விமர்சகர்கள் உணர்வார்களா...?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP