உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்- சச்சின் புகழாரம்

உலகளவில் ரஷீத் கான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான். இவர் இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் ரூ.9 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர். ஐ.பி.எல் போட்டியில் நேற்று நடந்த நாக்-அவுட் சுற்றில் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தாவை, ரஷீத் கான் தனது சூழலில் விழ வைத்தார். 

அவர் முக்கியமான மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். முடிவில் ஹைதராபாத் அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. நேற்றைய  போட்டி மட்டுமின்றி, இந்த சீசன் முழுவதும் ரஷீத் கான் தனது சிறந்த செயல்திறனால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவரது ஆட்டத்தை  கண்டு மெர்ஸிலிருத்து போன முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் சச்சின், "நான் எப்போதும் ரஷீத் கான் சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறேன். தற்போதும் எந்தவித தயக்கமுமின்றி கூறுகிறேன்.. அவர் இந்த உலகத்தின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். பந்துவீச்சு மட்டுமில்லாமல் அவர் பேட்டிங்கிலும் சிறந்து விளங்குகிறார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். சிறந்த வீரர்" என்று ட்வீட் செய்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP