ராஜஸ்தான் ராயல்ஸ்: இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகல்

ஐ.பி.எல் போட்டியில் இருந்து மூன்று வாரங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துஷ்மந்தா சமீரா.
 | 

ராஜஸ்தான் ராயல்ஸ்: இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகல்

ராஜஸ்தான் ராயல்ஸ்: இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகல்

ஐ.பி.எல் போட்டியில் இருந்து மூன்று வாரங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துஷ்மந்தா சமீரா விலகியிருப்பார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா, இரண்டு ஆண்டு தடைக்கு பின் களமிறங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டார். இந்த நிலையில், முதுகு காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஐ.பி.எல் போட்டியில் இருந்து அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ராஜஸ்தான் அணி, டெல்லியிடம் மோத உள்ள சூழ்நிலையில், சமீரா விலகியுள்ளார். 

டி20 லீக் போட்டிக்கு பிறகு இலங்கை அணி, வெஸ்ட் இண்டீசுக்கு மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணத்தில் சமீரா பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜின்க்யா ரஹானே (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ராகுல் த்ரிபாதி, டி ஆர்சி ஷார்ட், கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா அர்ச்சர், தவள் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட், அங்கித் சர்மா, அனுரீத் சிங், ஜாகிர் கான், ஷ்ரேயாஸ் கோபால், பிரஷாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், பென் லக்ஹ்லின், மஹிபால் லொம்ரோர், அர்யமான் பிர்லா, ஜதின் சக்சேனா, துஷ்மந்தா சமீரா, ஹெய்ன்ரிச் க்ளாஸென். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP