ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்திய அணி கேப்டனாக ரஹானே

இந்தியாவுக்கு வந்து ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்க இருக்கிறார்.
 | 

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்திய அணி கேப்டனாக ரஹானே

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்திய அணி கேப்டனாக ரஹானே

இந்தியாவுக்கு வந்து ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்க இருக்கிறார். 

தேசிய தேர்வுக்குழு கூட்டம் நாளை (மே 8) பெங்களூருவில் நடக்கிறது. இக்கூட்டத்தில் ஆறு வெவேறு இந்திய அணிகளை தேர்வுக்குழு தேர்வு செய்ய உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 'ஏ' அணி, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீசுடன் முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் இந்தியா 'ஏ' அணி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய டி20 அணி, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய டி20 அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆகிய அணிகளை தேர்வுக்குழு தேர்வு செய்கிறது. 

வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கவனம் செலுத்த, கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி பயிற்சி எடுக்க விராட் முடிவு செய்துள்ளார். 

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அஜின்க்யா ரஹானே புதிய கேப்டனாக, நாளைய கூட்டத்தில் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், கே.எல்.ராகுல், முரளி விஜய், அஷ்வின், தினேஷ் கார்த்திக், க்ருனால் பாண்டியா ஆகியோர் இந்திய 'ஏ' அணியில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரோஹித், தவான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பெற உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP