ஐ.பி.எல்-காக சென்னையில் ட்ராஃபிக்கை மாற்றியது காவல்துறை!

11-வது ஐ.பி.எல் போட்டி கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஐ.பி.எல் தொடரில் நான்கு ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று சேப்பாக்கத்தின் சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
 | 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுகிறது. இதனால் சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக போட்டி நடக்கும் சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு போக்குவரத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் நடக்கும் அனைத்து ஐ.பி.எல் போட்டிகளின் போதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. 

ஐ.பி.எல்-காக சென்னையில் ட்ராஃபிக்கை மாற்றியது காவல்துறை!

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் 10 (இன்று), 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 5, 13 தேதிகளில் மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும். அன்றைய தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த 7 நாட்களிலும் பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்த மாற்றம் அப்படியே எதிர்ப்பதமாக மாற்றி செயல்படுத்தப்படும்.

ஐ.பி.எல்-காக சென்னையில் ட்ராஃபிக்கை மாற்றியது காவல்துறை!

காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலைக்கு மாநகர பேருந்துகள், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கெனால் சாலை, பாரதி சாலையில் இருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும். வாலாஜா சாலையில் இருந்து வாகன அனுமதி இல்லை.

அண்ணா சாலை வழியாக M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் மட்டுமே வாலாஜா சாலையில் செல்லலாம். அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் பெல்ஸ் சாலை, பாரதி சாலை, கெனால் சாலையில் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லலாம். B, R எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்.

போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை வழியாக காமராஜர் சாலையில் வரும் மாநகர பேருந்துகள் பாரதி சாலையில் அனுமதிக்கப்படும். M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலையில் சென்று நிறுத்தலாம். அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிரில், கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்த வேண்டும். அனுமதி அட்டையில்லாத வாகனங்களை கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP