பாகிஸ்தான் தொகுப்பாளினியை கவர்ந்த கே.எல். ராகுல்

ஐ.பி.எல்-ல் அதிரடி காட்டிய கே.எல்.ராகுலை பாகிஸ்தான் தொகுப்பாளினி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
 | 

பாகிஸ்தான் தொகுப்பாளினியை கவர்ந்த கே.எல். ராகுல்

பாகிஸ்தான் தொகுப்பாளினியை கவர்ந்த கே.எல். ராகுல்

ஐ.பி.எல்-ல் அதிரடி காட்டிய கே.எல்.ராகுலை பாகிஸ்தான் தொகுப்பாளினி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

2018 ஐ.பி.எல் போட்டியில் நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி, 158 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணியின் துவக்க வீரர் ராகுல், 70 பந்துகளில் 90 ரன் எடுத்து அதிரடி காட்டிய போதும் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியாதது துரதிஷ்டமாக அமைந்தது. 

பாகிஸ்தான் தொகுப்பாளினியை கவர்ந்த கே.எல். ராகுல்

இருப்பினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்காக போராடிய ராகுலுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டு மழை பொழியப்பட்டது. இந்த நிலையில், ராகுலின் இந்த அதிரடி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜினாப் அப்பாஸ், ட்விட்டரில் பாராட்டியிருக்கிறார். "கே.எல். ராகுல் கவர்ந்துவிட்டார், நல்ல டைமிங், சிறந்த ஆட்டம்" என்று புகழ்ந்துள்ளார். 

பாகிஸ்தான் தொகுப்பாளினியை கவர்ந்த கே.எல். ராகுல்

இந்த சீசனில் ராகுலின் ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதுவரை அதிக ரன் எடுத்தவர்களில் அம்பதி ராயுடுவை பின்னுக்கு தள்ளி ராகுல் முதலிடம் பிடித்துள்ளார். 10 போட்டிகளில் 471 ரன் அடித்துள்ளார் ராகுல். ராஜஸ்தான் ராயல்ஸ், நாளை (மே 11ம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP