ஒருநாள் தரவரிசையில்: டாப் 5க்கு முன்னேறினார் ஸ்மிரிதி மந்தனா

இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, பெண்கள் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் டாப்-5ல் இடம் பிடித்துள்ளார்.
 | 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மந்தனா 181 ரன் அடித்தார். இதில் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 77.68. அவரின் சிறப்பான ஆட்டத்தால் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறினார். இந்த வருடம் மந்தனா, 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 531 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, இங்கிலாந்துக்கு எதிராக 104 ரன்கள் விளாசினார். இதனால் பேட்டிங் வரிசையில் 16-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தார். பெர்ரி மற்றும் ஸ்தாபாணி டெய்லர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சாளர் பட்டியலில், தீப்தி 14-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்தின் டேனியில்லே ஹஸில் 6 விக்கெட் வீழ்த்தி 16 இடங்கள் ஏற்றம் கண்டு 12-வது இடத்தை பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோன்ஸன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP