தடை நீக்கப்பட்டாலும் ரஷ்ய வீரர்களுக்கு 'நோ' ஒலிம்பிக்ஸ்- ஐஓசி

தடை நீக்கப்பட்டாலும் ரஷ்ய வீரர்களுக்கு 'நோ' ஒலிம்பிக்ஸ்- ஐஓசி
 | 

தடை நீக்கப்பட்டாலும் ரஷ்ய வீரர்களுக்கு 'நோ' ஒலிம்பிக்ஸ்- ஐஓசி


கடந்த வாரம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம், ஒலிம்பிக்கின் போது ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக 28 ரஷ்ய வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீக்கியது. இதனால், இவர்கள் வரும் 9ம் தேதி தொடங்க இருக்கும் பியெவ்ங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், இன்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், நீதிமன்றம் தடையை நீக்கியிருந்தாலும், வாழ்நாள் தடை பெற்ற 28 வீரர்களில் 15 வீரர்கள், பியெவ்ங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான அழைப்பை விடுக்கவில்லை. இந்த 15 வீரர்களில் 13 பேர் தடகள போட்டியாளர்கள் மற்றும் இரண்டு பேர் ஊழியர்கள். 28 பேரில் மீதமிருப்பவர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சில பேர் வெளியிடப்படாத காரணங்களால் தொடர்பில்லை இல்லை. 

முன்னதாக, 169 ரஷ்ய வீரர்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, நடுநிலை கொடியின்கீழ் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP