ரோகித் சர்மாவின் புதிய அவதாரம்

அமெரிக்காவில் நடக்கும் பேஸ்பால் போட்டியில் முதல் த்ரோவை வீசும் பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
 | 

ரோகித் சர்மாவின் புதிய அவதாரம்

அமெரிக்காவில் நடக்கும் பேஸ்பால் போட்டியில் முதல் த்ரோவை வீசும் பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.  
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா. இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அந்த அணி பிளேஆப் சுற்றுக்க முன்னேறாமல் வெளியேறியது. 
இந்நிலையில் அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் தொடர் நடக்கிறது. இன்று நடக்கவிருக்கும் அந்த போட்டியில் சியட்டில் மரினர்ஸ் அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.அந்த அணிக்கு எதிராக டாம்பா பே ரேஸ் களமிறங்க உள்ளது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ரோகித் சர்மா அழைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியை துவக்கி வைக்கும் ரோகித் சர்மா, சியட்டில் அணிக்காக முதல் த்ரோவை வீச உள்ளார். இந்த பெருமையை பெறும் முதல் இந்தியர் ரோகித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது "Desh-Legends of Cricket Series"க்காக அமெரிக்காவின் 3 நகரங்களுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் தனது மனைவியுடன் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP