சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

ஸாவோ ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
 | 

சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

ஸாவோ ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். 

பின்லாந்தின் லாபின்லேஹ்டியின் ஸாவோ போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, சீன தைபேவின் சாவோ சுன் செங்கை வீழ்த்தி, தங்கத்தை கைப்பற்றினார். 

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவரான நீரஜ், 85.69மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். செங், 85.52மீ தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். 

இந்த சீசனின் ஆசிய பட்டியலில், நீரஜ் முதலிடத்தில் உள்ளார். செங் இரண்டாம் இடத்திலும், கத்தாரின் அஹ்மத் பதேர் மகௌர் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆசிய போட்டிக்கு முன் நீரஜ், வார்ம்-அப் போட்டியாக இதில் பங்கேற்றுள்ளார். இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 18-வது ஆசிய போட்டிகள் நடைபெற உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP